TRP-ல் படுமோசமான இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது விஜய் டிவி சீரியல்கள்.

Tv Serials TRP Rating Analysis : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பி தான் மிக முக்கியக் குறிக்கோள். எந்த சேனல் எவ்வளவு டிஆர்பி ரேட்டிங்கை பெறுகிறது என்பதை வைத்துதான் அதன் பார்வையாளர்களை கணக்கிட முடிகிறது.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்கள் டிஆர்பி நல்ல இடத்தை பெற்று வந்தன.

ஆனால் தற்போது இந்த சீரியல்களில் பெரியதான விறுவிறுப்பான கதை இல்லை. சமீப நாட்களாக வே தினமே எபிசோடை எப்படி கழிப்பது என்பதை மனதில் வைத்து மட்டுமே சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவது போல தெரிகிறது. விறுவிறுப்பு இல்லாத கதைகளத்தால் இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் படு மோசமான அளவிற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல், சுந்தரி, வானத்தைப் போல, ரோஜா, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்கள் டி ஆர் பி-ல் நல்ல இடத்தைப் பெற்றுள்ளன. இதனால் விஜய் டிவி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் கதையின் விறுவிறுப்பை கொண்டுவந்தால் மட்டுமே இந்த சீரியல்கள் டிஆர்பி முன்னேற்றத்தை காணும், இல்லையேல் இன்னும் மோசமாக பின்னுக்குத் தள்ளப்படும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.