Glass-of-Water

☆ கெட்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களால் ஒருவரது மனம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

☆ உதாரணமாக, ஒருவரது வீட்டில் கெட்ட சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டினுள் நுழையும் போதே சந்தோஷமாக இருந்த மனநிலையில் திடீரென்று மாற்றத்தைக் காணக்கூடும்.

☆ நம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்ற ஒருசில இயற்கை வழிகள் உள்ளன.

● டம்ளர் நீர்

தூங்கும் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெளியே ஊற்றி விட வேண்டும். மீண்டும் மறுநாள் இரவில் புதிய நீரை டம்ளரில் நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

● எதிர்மறை ஆற்றல் இருப்பதை அறிவது எப்படி?

இரவில் ஒரு டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலையில் பார்க்கும் போது, அந்நீரில் சிறுசிறு நீர்முட்டைகள் மற்றும் நீர் கலங்கலாக இருந்தால், நீர் எதிர்மறை ஆற்றல் முழுவதையும் உறிஞ்சிவிட்டது என்று அர்த்தம்.

இப்படி தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் நீரை வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறி, மனம் அமைதியுடன் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here