நடிகர் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Tughlaq Durbar Movie Stills : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் படங்களில் நடித்து வருபவர்.
கிடுகிடுவென தன்னுடைய திறமையாலும் எதார்த்தமான நடிப்பாலும் உச்சத்தை தொட்டவர்.
இவர் தற்போது மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து தற்போது இப்படத்தில் இருந்து சில புகைப்படங்களை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அரசியல்வாதியாக மாறி இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.