Tuberose Flower : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Tuberose Flower :

# ஐந்தாறு சம்பங்கிப் பூக்களைத் தீநீராக்கிச் சுவைக்காகப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் குடிப்பதால் செரிமானத்தைத் துரிதப்படுத்தி சீரணக் கோளாறு களைக் கண்டிக்கும். மேலும் வெயிற்காலத்தில் வெயிலில் திரிந்து வந்ததால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும்.

# தலைவலி குறைய சம்பங்கி பூவினை அரைத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தடவி வந்தால் தலைவலி பறந்துபோகும்.

# சம்பங்கிப் பூ, சர்க்கரை இவற்றை காய்ச்சி குடிக்க மலச்சிக்கல் குறையும்.

# மன உளைச்சல், மன அழுத்தம், கோபம், படபடப்பு, நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, தசைப் பிடிப்பு, குத்திருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் தணிக்க உதவுகிறது.

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்.

# சம்பங்கியின் நறுமணம் நரம்புகளுக்கும், சுவாச உறுப்புகளுக்கும் சுகம் தரவல்லது.

#சம்பங்கிப் பூக்களை மைய அரைத்துப் பாதங்களின் புறப்பகுதியில் ஏற்படும் வெடிப்புகளின் மேல் பூசி வைக்க சில நாட்களில் வெடிப்புகள் மறைந்து பாதம் அழகு பெறுவதோடு பாத வலியும் பறந்து போகும்.

# காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.
வயிற்று வலி குறைய
வயிற்று வலி குறைய மிளகு எடுத்து கஷாயம் செய்து அதில் கற்கண்டு தூள் செய்து போட்டு நன்றாக கலக்கி குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here