ttv dinakaran symbol
ttv dinakaran symbol

ttv dinakaran symbol – டெல்லி : மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தர கோரி வழக்கு தொடரப்பட்டது.ஆனால் அமமுக கட்சி, ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தினகரனுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதோடு மட்டுமின்றி, குக்கர் சின்னத்தை மறுத்ததோடு, தினகரன் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒன்றை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்..

பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவு நகலுடன் தாங்கள் எதிர்பார்க்கும் தொப்பி, குக்கர், சாவி ஆகிய மூன்று பொதுச் சின்னங்களில் இருந்து ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு மூன்று சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் தரப்பு சமர்ப்பித்தது.

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் தரப்பு கேட்டுக்கொண்ட 3 பொதுச் சின்னங்களில் இருந்து முற்றிலும் மாறாக, அமமுகவுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ttv dinakaran symbol
ttv dinakaran symbol