TTV Dinakaran open talk
TTV Dinakaran open talk

TTV Dinakaran open talk – சென்னை: தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கூறியுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதாவது அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஆனாலும் இவர்கள் ஒரே கட்சியாக கருதபடாமல், சுயேட்சையாக நிற்பதாக கருதப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், உலக தமிழர்கள் எல்லோரும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். குக்கர் சின்னம் கிடைக்கும் என்று நாங்களும் எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை.

இருப்பினும், “குக்கர் சின்னம் கிடைக்காவி்டாலும், சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று நினைத்தோம்.

ஆனால் தற்போது எங்களுக்கு பொது சின்னம் தரப்பட்டுள்ளது. எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.

ஆர்.கே நகரில் ஒரே வாரத்தில் குக்கர் சின்னத்தை பிரபலம் அடைய செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது..எனவே எந்த சின்னம் கொடுத்தாலும் அதையும் பிரபலம் அடைய செய்வோம்” என்று கூறினார்.

இந்நிலையில், நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும், எல்லா வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here