விஜய் சேதுபதி படத்தின் காப்பியா ஜகமே தந்திரம் என ட்ரைலரை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Trolls on Jagame Thanthiram Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி படத்தின் காப்பியா ஜகமே தந்திரம்?? டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று யூ டியூப்பில் வெளியானது. படத்தின் டிரைலரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் விதவிதமான கெட்டப்புகளில் அசத்தி இருப்பதாக கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் ஜகமே தந்திரம் டிரைலரை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தைப் போல இருப்பதாக கலாய்த்து வருகின்றனர். 2 படத்தின் கதைக் களமும் ஒரே மாதிரி இருப்பது போல உள்ளது என கூறுகின்றனர்.

அதேசமயம் இன்னொரு தரப்பினர் டிரைலரை வைத்து எதையும் எடை போடக்கூடாது படம் ரிலீஸ் ஆகட்டும் எனவும் கூறி வருகின்றனர்.