Trisha Next

Trisha Next : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா. 96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

இதைதொடர்ந்து சித்தார்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் த்ரிஷா கமிட்டாகியுள்ளார். கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான அந்தாதுன் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சித்தார்த் – த்ரிஷா இணைகிறார்கள்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்த படத்தில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த ரோலில் சித்தார்த்தும், ராதிகா ஆப்தே ரோலில் த்ரிஷாவும் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த ஜோடி மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தனர். அதன் பின்னர் தமிழில் அரண்மனை 2, தெலுங்கில் நுவோதஸ்தானே நுனோடோன்டனா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் தமிழில் இவர்கள் நடித்த ஒரு படம் கூட வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அந்த சென்டிமென்டை இந்த படம் மாற்றியமைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.