Trisha Nayanthara

Trisha Nayanthara : என் வலையில் இருந்து தப்பித்தது த்ரிஷாவும் நயன்தாராவும் தான் என்பது போல 96 பட நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் ஒரே காலக்கட்டத்தில் நடிக்க வந்தவர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த த்ரிஷாவும்.

இருவருமே தற்போது வரை பிஸியான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்கள். சமீபத்தில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படம் த்ரிஷாவுக்கு மிக பெரிய பெயரை பெற்று கொடுத்தது.

படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படக்குழு உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகரும் இயக்குனருமான பார்த்திபனும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பார்த்திபன் பல நடிகைகளை என்னுடைய படங்களில் நடிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தேன்.

ஆனால் அந்த வலையில் இருந்து தப்பித்து கொண்டது இருவர் தான். அது த்ரிஷாவும் நயன்தாராவும் தான் என வேடிக்கையாக பேசியிருந்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.