Trisha Name Issue in Paramapatham Movie

பரமபத விளையாட்டு படத்தில் திரிஷாவின் பெயர் வேறு விதமாக இடம் பெற்றிருந்ததால் ரசிகர்கள் அவர் பெயரை மாற்றி விட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trisha Name Issue in Paramapatham Movie : தமிழ் சினிமாவில் 90 முதல் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக பரமபத விளையாட்டு என்ற படம் OTT வழியாக வெளியானது. இந்த படத்தின் டைட்டில் கார்டில் திரிஷா என்பதற்கு பதிலாக த்ர்ஷா என இடம்பெற்றிருந்தது. இதனால் திரிஷா பெயரை மாற்றி விட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திரிஷா பெயரையெல்லாம் மாற்றமில்லை அழகான பெயர் இருக்கும் போது எதற்கு மாற்ற வேண்டும்? வதந்திகளை நம்பாதீர்கள் என விளக்கம் அளித்துள்ளார்.