Trisha is not pair of Vijay in Thalapathy 64
Trisha is not pair of Vijay in Thalapathy 64

Trisha is not pair of Vijay in Thalapathy 64

முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பார் என்று கூறப்பட்டது பின்னர் மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் ஒரு தகவல் கசிந்தது

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் – ஆச்சரியத் தகவல்!

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பார் என்று கூறப்பட்டது பின்னர் மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் ஒரு தகவல் கசிந்தது.

ஆனால் உண்மையில் தற்போது வரை இப்படத்தில் விஜயை தவிர நடிகர்கள் வேறு யாரும் ஒப்பந்தமாகவில்லையாம்.

கைதி படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை முடித்த பிறகே விஜய் படத்தின் மீது முழு கவனம் செலுத்த உள்ளார்.