Trisha in Aadukalam Movie
Trisha in Aadukalam Movie

ஆடுகளம் படத்தில் முதன்முதலாக டாப்சிக்கு படத்தின் நாயகியாக த்ரிஷா தான் நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trisha in Aadukalam Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 1990 முதல் இன்று வரை முன்னணி நடிகையாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். மேலும் இவர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்திலும் நடித்துள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பில் நாயகியாக நடித்த த்ரிஷா இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் தான் கமிட் ஆகியிருந்த இந்தி படத்தின் காரணமாக இப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

அதன் பின்னர் தான் நடிகை டாப்ஸி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரிஷாவும் தனுஷும் சேர்ந்து இந்த படத்தில் நடித்த புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்