trending
திமுகவை விமர்சனம் செய்தும், கிண்டலடித்தும் நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகள் நேற்று மாலை இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.

Trending hashtag in twitter against dmk – தீவிர அரசியலில் இறங்குவதாக அறிவித்திருந்தாலும் ரஜினி இன்னும் தனது கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.

ஆனாலும், ரஜினி மக்கள் மன்றம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் மற்றும் அவரது அரசியல் கட்சிக்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

twitter

சமீபத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் இருந்த ஒரு பழைய பள்ளிகூடத்தை ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் சீரமைத்தனர் அதன்பின் அது தொடர்பான கல்வெட்டையும் பதித்து சென்றனர்.

இதைக்கண்டு திமுகவினர் கோபமடைந்தனர். அந்த கல்வெட்டை அங்கிருந்து அகற்ற வேண்டும் என மோதலில் ஈடுபட்டனர். அதோடு, அவர்களே அந்த கல்வெட்டை பெயர்த்து எறிந்தனர்.

விரைவில் ரஜினி முதல்வர்… அவருடன் அதிமுக கூட்டணி – ராதாரவி பரபரப்பு பேச்சு

இந்த விவகாரம் வெளியே தெரிய வர, இதை கையில் எடுத்த ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ‘#ரஜினி பயத்தில் திமுக’ என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி திமுகவை கிண்டலடித்து பதிவுகளை போடத் துவங்கினார்.

பலரும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தவே நேற்று மாலை மற்று இரவில் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.