Treatment for Verucca :
Treatment for Verucca :

Treatment for Verucca :

கால் ஆணியால் அவதிப்படுகிறீர்களா? கால் ஆணியை காணாமல் போக இதோ எளிமையான வீட்டு மருத்துவக் குறிப்புகள்:

* காலில் ஆணி குத்தினால் எப்படி வலி ஏற்படுமோ அதே போன்ற வலிதான் ஆணிக்கால் உள்ளோருக்கு ஏற்படும்.

* கால் ஆணி உள்ளோர்கள் மென்மையான காலணிகளை அணிய வேண்டும்.
குறிப்பு 1

* ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயுடன் ,வறுத்து பொடி செய்த கடுகுப் பொடி, மஞ்சள் பொடி இவற்றை ஒன்றாக தைல பதத்தில் காய்ச்சி கொள்ள வேண்டும்.

இந்தத் தைலத்தை இரவு உறங்குவதற்கு முன்பு கால்களை சுத்தம் செய்த பின்பு இந்த தைலத்தை தடவி கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கால் ஆணி விரைவில் குணமாகும்.

குறிப்பு 2

* வேப்பிலை இலை ,குப்பைமேனி இலை இவற்றை நன்றாக பசைபோல் அரைத்து ,அதனுடன் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி உள்ள இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் கட்டி இரவு முழுவதும் கட்டிக்கொள்ள வேண்டும். இக்குறிப்பு கால் ஆணியை மிக விரைவில் குணமாக்க செய்யும்.

குறிப்பு 3.

* கால் ஆணி ஏற்படுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், பூண்டை நசுக்கி அதன் சாற்றை காலில் ஆணி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இல்லையெனில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணி வைத்து கட்டிக் கொள்ளலாம்.

குறிப்பு 4.

* கொய்யா இலை பசை போல அரைத்து ,அதனுடன் விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி சேர்த்து தைல பதத்தில் காய்ச்ச வேண்டும்.

இந்த தைலத்தை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இரவு முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் காலையில் கால்களை கழுவி கொள்ள வேண்டும்.

குறிப்பு 5.

* மருதாணி இலையுடன் மஞ்சள் துண்டு இவற்றை ஒன்றாக சேர்த்து பட்டுப்போல அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு, கால் ஆணி உள்ள இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.

இதுபோன்று தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் கால் ஆணி இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here