Treatment For Cold :
மழைக்கால ஜலதோஷம் நீங்க வேண்டுமா?சளி,காய்ச்சல் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளை வேண்டுமா?
இங்கு கொடுத்துள்ள இயற்கை பொருள்களை பின்பற்றினாலே போதும். வாங்க படித்து, பயன்படுத்தி பயன்பெறலாம்.
1. ஜலதோஷம் நீங்க துளசி சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.
2. துளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.
3. சின்ன வெங்காயச் சாறு, இஞ்சி சாறு ,தேன் இம்மூன்றையும் கலந்து சாப்பிட ஜலதோஷம் இருமல் குறையும்.
4. சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து பொடி செய்து ,பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
5. சர்க்கரை சேர்க்காத கடும் காபியை, காலையில் குடித்து வந்தால் ,ஜலதோஷம் குறையும்.
6. துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இவை இரண்டின் சாறையும்
கலந்து, ஒரு வேளைக்கு 10 மில்லி லிட்டர் வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்.
7.தூதுவளை இலையில் ரசம் வைத்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
8. கரிசலாங்கண்ணிச் சாறுடன், தேன் கலந்து குடித்தால் ஜலதோஷம் குறையும்.
9. அரைக் கீரையுடன் மிளகு பொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர ஜலதோஷம் குறையும்.
10. மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.