தல தளபதி ரசிகர்களுக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் கொடுக்க இருக்கும் செம ட்ரீட் வைரல்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வளம் பெறுபவர்கள் அஜித் மற்றும் விஜய். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேராக பொங்கலுக்கு மோதிக்கொள்ள உள்ளன. ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தல-தளபதி ரசிகர்களுக்கு… பிரபல இசையமைப்பாளர் கொடுக்க இருக்கும் செம ட்ரீட்!.

இந்நிலையில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து 2வது பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடலும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

தல-தளபதி ரசிகர்களுக்கு… பிரபல இசையமைப்பாளர் கொடுக்க இருக்கும் செம ட்ரீட்!.

அதில் ரசிகர்களுக்கான செம்மையான ட்ரீட் என்னவென்றால் இந்த இரண்டு பாடல்களையும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது தல-தளபதி ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.