TRB Raja About Thala Ajith
TRB Raja About Thala Ajith

எம்எல்ஏ TRB ராஜா அவர்கள் தல அஜித்தை புகழ்ந்து தள்ளி பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TRB Raja About Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ், பைக் ரேஸ், கார் ரேஸ், ஆளில்லா விமான ஆராய்ச்சி என பன்முகத்திறமை கொண்டவர்.

தற்போது இவர் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஸ்போர்ட்ஸ் பற்றியும் பைக் ரேஸ் உள்ளிட்டவை பற்றியும் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ TRB ராஜா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை பாராட்டியுள்ளார்.

எனக்கும் தற்கொலை செய்து கொள்ள தோன்றியது, ஆனால்? – முதல் முறையாக யுவன் கூறிய அதிர்ச்சி தகவல்

இதுகுறித்த அவரது பதிவில் இந்த RARE நேர்காணல் அஜித் விளையாட்டு மற்றும் ரேஸ் மீது வைத்துள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. அவரது இதயம் இன்னும் அதே தளத்தில் இருப்பதை தெளிவாகக் காணலாம்!

அனைத்து #பிரபலங்களும் அவரைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன் & இந்தியாவில் விளையாட்டுகளை ஆதரிக்க அவர்களின் பிரபல நிலையைப் பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

தலபோலவருமா #தலஅஜித் #தல என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்தப் பாராட்டு ட்வீட் குறித்து ரசிகர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்ஸ்.