Soorarai Potru Trailer

சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Trailer Update on Soorarai Potru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் ஜி.வி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக இந்த படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.