கோட் படத்தின் டிரைலர் குறித்து நாளை தகவல் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் பிரபுதேவா ,மீனாட்சி, சவுத்திரி ,சினேகா, பிரசாந்த் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இது மட்டும் இல்லாமல் ஃப்ரீ புக்கிங்கிலும் கோட் தூள் கிளப்பி வருவதாக தகவல்கள் வெளியானது. செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், உங்களுக்காக ஒரு அற்புதமான ட்ரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம். எனவே அமைதியாக இருங்கள் மற்றும் எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் நாளை சரியான அப்டேட் தருகிறேன் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இது விஜய் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.