Top5 TRP Rating Serials

டிஆர்பி-யில் பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு படி முன்னேற்றத்தை கண்டுள்ளது.

Top5 TRP Rating Serials : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி தொடர்ந்து முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இந்த சீரியல்களுக்கு போட்டியாக இருந்து வருவது பாரதிகண்ணம்மா சீரியல் மட்டும் தான்.

கடந்த வாரம் வரை நான்காவது இடத்தில் இருந்து வந்த பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது கொஞ்சம் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

சென்ற வாரத்தின் நிலவரப்படி முதலிடத்தில் தொடர்ந்து ரோஜா சீரியல் உள்ளது. இரண்டாவது இடத்தைப் பிச்சைக்காரன் திரைப்படம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் உள்ளது. நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் வானத்தைப்போல மற்றும் பூவே உனக்காக உள்ளிட்ட சீரியல்கள் உள்ளன.

அடுத்த வார டிஆர்பி-யில் இந்த டாப்-5 லிஸ்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொறத்திருந்து பார்க்கலாம்.