Top5 Collection Movies of Ajith

பட்ஜெட்டை தாண்டி அஜித்திற்கு மிகப்பெரிய வசூலைக் குவித்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top5 Collection Movies of Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் இந்த காட்சிகளை படமாக்க வேண்டும் என்பதால் படக்குழு காத்திருப்பில் இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க தற்போது இதுவரை அஜீத் நடிப்பில் வெளியான படங்களின் பட்ஜெட்டை தாண்டி இருப்பினும் குறித்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. வாலி

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நாயகியாக நடித்து இருந்தனர்‌.

  1. வரலாறு

எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு பல பாராட்டுகளை பெற்றுக்கொண்டது. திருநம்பி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதால் அஜித் பயந்து தான் நடித்தார். ஆனால் இந்தப் படம்தான் அவருக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெற்றுத்தந்தது.

  1. பில்லா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பில்லா. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்றாலும் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தின் முலம் தான் தல அஜித் ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

  1. வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டாவது முறையாக நான் உருவான கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் வேதாளம். வித்தியாசமான கதைக்களத்துடன் தங்கை பாசத்தை பேசும் திரைப்படமாக வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது.

  1. விவேகம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3வது முறையாக தல அஜித் கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் தான் விவேகம். ஹாலிவுட் ஸ்டைலில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றது.