தமிழ் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Top Paid Actors in Tamil Cinema : சினிமா என்றாலே பணம் விளையாடும் பூமி என கூறலாம். முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி கமல் அஜித் விஜய் போன்றவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்? - முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் இறுதியாக அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க. ‌‌

  1. ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவருக்கு ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

  1. கமல்ஹாசன்

ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஜாம்பவான் நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் இறுதியாக விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரூபாய் 34 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

  1. விஜய்

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்ததாக மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பிகில் திரைப்படத்திற்காக ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கிய இவர் மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூபாய் 80 கோடி வாங்கினார்.

  1. அஜித் குமார்

விஜய்க்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தல அஜித் இருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார்.

  1. தனுஷ்

நடிகர் தனுஷூம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு 31 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.