Top Heros Salary Issue
Top Heros Salary Issue

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் சம்பளம் குறித்த விவகாரத்தில் மூச்சு விடாமல் இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பாகி உள்ளது.

Top Heros Salary Issue : கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமாத்துறை படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் அனைத்தும் முடங்கிப் போயுள்ளது.

ஷூட்டிங் நடக்க வில்லை என்றாலும் தயாரிப்பாளர்கள் தங்கள் வாங்கிய பணத்துக்காக பைனான்சியரிடம் வட்டி கட்டியாக வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்.. ரஜினிக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இதனை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், ஹரிஸ் கல்யாண், நடிகர் உதயா, இயக்குனர் ஹரி இன்னும் பல நடிகர்கள் தங்களுக்கு பேசப்பட்ட சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறைத்துக் கொண்டுள்ளனர். சிலர் முழு சம்பளத்தையும் விட்டுக் கொடுத்துள்ளனர்.

வளர்ந்து வரும் நடிகர்கள் எல்லாம் பெரிய அளவில் சம்பளம் வாங்குவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களது சம்பளங்களை தயாரிப்பாளர்களின் நலன் கருதி குறைத்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் அஜித், விஜய், ரஜினி போன்ற 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் இது குறித்து மூச்சு விடாமல் இருப்பது தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.