Top Collection Movies of Vijay
Top Collection Movies of Vijay

தளபதி விஜயின் திரை படங்கள் இதுவரை படைத்த வசூல் சாதனையை முறியடிக்க மாஸ்டர் திரைப்படம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

Top Collection Movies of Vijay : தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கண்டு திரையுலகில் வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் ரசிகர்கள் பலரால் கவரப்பட்டு மிகப்பெரிய ஆளுமை தன்மை பெற்றவராக விளங்குகிறார்.

இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அப்படி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் பிகில் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மெர்சல் சர்க்காருக்கு அடுத்து 200+ கோடி வசூலை எட்டிய பிகில் திரைப்படம் தளபதி விஜயின் சினிமா வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றியே எனக் கூறலாம்.

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 29 திரைப்படங்கள், அஜித், விஜய், ரஜினிக்கு என்ன இடம்?? – முழு லிஸ்ட் மற்றும் வசூல் விவரத்துடன் இதோ!

தளபதி விஜயின் மெர்சல் படம் ரூபாய் 244 கோடியை பெற்று நான்காவது இடத்திலும் அவர் நடித்த சர்க்கார் திரைப்படம் ரூபாயை 243 கோடியை பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

டாப் 10 திரை தமிழ் திரைப்படங்களில் இவரது இரண்டு படங்கள் இடம்பெற்று நிலையில் தற்போது பிகில் திரைப்படமும் 300 கோடி வசூலை ஈட்டி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் தென்னிந்தியாவில் இப்படம் அதிக வசூல் செய்து 5 திரைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய்யின் திகில் படத்தின் சாதனையை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.