Top Collection Movies in March

சமீபத்தில் ரிலீசான படங்களின் சென்னை வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top Collection Movies in March : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான விஷாலின் சக்ரா, எஸ் ஜே சூர்யா வின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த மூன்று படங்களும் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படத்தை அவர் தயாரிக்க எம் எஸ் ஆனந்தன் என்பவர் இயக்கியிருந்தார். அதேபோல் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் வெளியான நெஞ்சம்மறப்பதில்லை படத்தினை செல்வராகவன் இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடப்பில் இருந்த இப்படம் ஒரு வழியாக வெளியானது. இதனைக் தொடர்ந்து அடுத்ததாக சந்தானத்தின் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தை கே ஜான்சன் என்பவர் இயக்கினார்.

இந்த படங்களின் சென்னை வசூல் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

நெஞ்சம் மறப்பதில்லை – 1.05 CR, 1 week

சக்ரா – 1.78 CR, 3 weeks

பாரிஸ் ஜெயராஜ் – 1.39 CR, 4 weeks