2021 தமிழ் சினிமாவில் திரை உலகை மிரட்டிய ஐந்து வில்லன்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 5 Villians of Tamil Cinema 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில படங்களும் அதில் சிறப்பாக நடித்த நடிகர்களும் மட்டுமே மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிப்பார்கள்.

அந்த வகையில் இந்த 2021 ஒன்றில் வெளியான தமிழ் படங்களில் சிறப்பான நடிப்பால் திரை உலகை மிரட்டிய ஐந்து வில்லன்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

2021-ல் தமிழ் திரை உலகை மிரட்டிய ஐந்து வில்லன்கள் - உங்க ஃபேவரைட் யாரு?
  1. விஜய் சேதுபதி :

மாஸ்டர் படத்தின் தளபதி விஜய்க்கு வில்லனாக இவர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விஜயை விட விஜய் சேதுபதியின் நடிப்பு சூப்பர் என படம் பார்த்து விமர்சனம் சொன்னவர்கள் பலர் உண்டு.

  1. எஸ் ஜே சூர்யா :
2021-ல் தமிழ் திரை உலகை மிரட்டிய ஐந்து வில்லன்கள் - உங்க ஃபேவரைட் யாரு?
ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் சிம்புவை நடிப்பை விட படு மாஸ். படத்திற்கு அவர் தான் மிகப்பெரிய பலம் என பாராட்டியவர்கள் பலர் உண்டு.

  1. நட்டி நடராஜ் :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் வில்லனாக மாறுபட்டு நடிப்பால் மிரட்டினார் நட்டி நட்ராஜ். இவருடைய கதாபாத்திரம் பலருக்கும் வெறுப்பைத் தரும் அளவிற்கு கொடூர வில்லனாக இந்த படத்தில் மிரட்டினார்.

இதை சொல்லித்தான் Actor Ashwin சர்ச்சையில் சிக்கிட்டாரு! #Pugazh #Ashwin #Sivaangi

  1. வினய் :

டாக்டர் திரைப் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் வினய். இதற்கு முன்னதாக ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்த இவர் டாக்டர் படத்தின் மூலம் முதல் முறையாக வில்லன் அவதாரம் எடுத்தார். முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் அடித்தது.

  1. ஜான் கொக்கன் :

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் கொக்கன். தமிழ் சினிமாவை திரும்பி பார்த்த வில்லன்களில் ஒருவராக இவரும் இடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக இந்த படத்தில் டன்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சபீர் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அவர் பீஸ்ட் படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌