யூ ட்யூபில் சாதனை படைத்த 5 வீடியோ பாடல்களின் லிஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த லிஸ்டில் பிகில் படத்தில் இருந்து ஒரு பாடல் கூட இடம் பெறவில்லை.
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு மிக பெரிய ப்ரோமோஷனை கொடுப்பது யூ ட்யூப் தான். படத்தின் ட்ரைலர்கள், டீஸர்கள், பாடல்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டுவதை தற்போது அனைத்து படங்களுக்கும் நடந்து வருகின்றன.
அப்படி இந்த வருடத்தில் யூ ட்யூபில் அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 5 வீடியோ பாடல்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
லிஸ்ட் :
1. ரவுடி பேபி – 731 மில்லியன்
2. மாஸ் மரணம் – 111 மில்லியன்
3. அடிச்சி தூக்கு – 67 மில்லியன்
4. அன்பே பேரன்பே – 55 மில்லியன்
5. காந்த கண் அழகி – 55 மில்லியன்
இந்த டாப் 5 லிஸ்டில் பிகில் படத்தில் இருந்து ஒரே ஒரு பாடல் கூட இடம் பெறாதது விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.