
Top 5 Movies in Kerala : கேரளாவில் மலையாளத்தை தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியாகி இருந்த படங்களில் டாப் 5 இடத்தில் எந்தெந்த படங்கள் இடம் பெற்றுள்ளன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவைகளில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் தான் சாதனை படைத்து வருகின்றன.
தமிழ் சினிமாவை போலவே கேரளா தளபதி விஜயின் கோட்டையாக இருந்து வருகிறது. மற்ற தமிழ் படங்களை காட்டிலும் தளபதி விஜயின் படங்களுக்கு அங்கு மவுசு அதிகம் என்றே கூறலாம்.
இதனால் தான் கேரளாவில் கடுமையான வெள்ளம் தாக்கிய போதும் விஜய் கோடிக் கணக்கில் நிவாரண உதவிகளை அளித்து தன்னை வாழ வைக்கும் மக்களுக்கு உதவி செய்திருந்தார்.
தற்போது 2.O படம் கேரளாவிலும் வெளியாகி இருந்தது, ஆனாலும் வசூல் சாதனையில் சர்கார் படமே தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட் :
1. சர்கார் – 5.62 CR
2. பாகுபலி 2- 5.45 CR
3. மெர்சல் – 4.65 CR
4. 2 பாயிண்ட் ஓ – 4.15 CR
5. கபாலி – 3.54 CR