Top 5 Movies

Top 5 Movies : கடந்த வாரம் நான்கு படங்கள் ரிலீஸாகியும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வசூலில் கெத்து காட்டியுள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ரிலீஸாவது வழக்கம். புதிய படங்கள் வசூல் செய்ய சரியாக ஒரு வாரம் தான் கிடைக்கும் என்பதும் நாம் அறிந்ததே.

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – NGK, காப்பான் படங்களின் ரிலீஸ் தேதி.!

இப்படியான சூழ்நிலையிலும் சில படங்கள் மட்டுமே தொடர்ந்து பல வாரங்களுக்கு வசூலில் கலக்கி வரும்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களும் அப்படி தான் தற்போது வரை வசூல் வேட்டையாடி வருகின்றன.

கடந்த வாரம் அதாவது பிப்ரவரி 1-ம் தேதி சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன், ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாளமயம், ராமின் பேரன்பு, சகா என நான்கு படங்கள் ரிலீஸாகி இருந்தன.

இருப்பினும் பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து டாப் 5 படங்கள் லிஸ்டில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளன. ஆனால் மூன்றாம், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சிம்புக்கு ஜோடியாகும் பிரபல நடிகை – மாநாடு பட அப்டேட்.!

பிப்ரவரி 1 முதல் 3 வரையிலான வசூலை பொறுத்து டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ

1. வந்தா ராஜாவாக தான் வருவேன்
2. சர்வம் தாளமயம்
3. விஸ்வாசம்
4. பேட்ட
5. பேரன்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here