சின்னத்திரையில் டாப் 5 நடிகைகளின் லிஸ்டில் பெரும்பாலும் சன் டிவி நடிகைகளே இடம் பெற்றுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களைப் பொறுத்தவரையில் சன் டிவி சீரியல்களுக்கு தான் டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் பிடித்த வருகிறது.

இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் டாப் 5 சீரியல் நடிகைகள் யார் என்ற லிஸ்டில் பெரும்பாலும் சன் டிவியை சேர்ந்த நடிகைகளே இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை கயல் சீரியல் சைத்ரா ரெட்டி பிடித்துள்ளார். அடுத்ததாக இரண்டாம் இடத்தை சுந்தரி சீரியல் கேப்ரில்லா பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா பிடிக்க மீண்டும் நான்காவது இடத்தை ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா பிடித்துள்ளார். கடைசியாக ஐந்தாவது இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா தேவி பிடித்துள்ளார். ஆனால் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலங்களை பொருத்தவரை ஐந்து இடங்களையும் விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே பிடித்துள்ளனர்.

இதோ அந்த லிஸ்ட்

  • 1. சிவாங்கி
  • 2. புகழ்
  • 3. பாலா
  • 4. நீயா நானா கோபிநாத்
  • 5. பிக் பாஸ் பிரியங்கா ஆகியோர் பிடித்துள்ளனர்.

இதன் மூலம் ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரை அசைக்க முடியாத இடத்தை விஜய் டிவி பிடித்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.