Top 5 Actors 2018

Top 5 Actors 2018 : ட்விட்டரில் 2018-ல் அதிகம் பேசப்பட்ட 5 நடிகர்கள் லிஸ்டில் தமிழ் சினிமாவை சேர்ந்த விஜய் மற்றும் சூர்யாவுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

2018-ம் ஆண்டு முடிவை நெருங்கி கொண்டிருக்கின்றது. இதனால் இந்த 2018-ல் என்னென்ன நடந்தன, திரையுலக பிரபலங்கள் செய்த சாதனைகளை என்ன என்ற விவரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வரிசையில் தற்போது ட்விட்டரில் அதிக அளவில் பேசப்பட்ட 5 நடிகர்கள் யார் யார்? என்ன காரணம் என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.

1. பவன் கல்யாண்
2. விஜய்
3. மகேஷ் பாபு
4. ஜுனியர் என்டிஆர்
5. சூர்யா

பவன் கல்யாண் :

பவன் கல்யாண் அரசியலில் இறங்கி விட்டதால் சமூக பிரச்சனைகளை குறித்து தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் டீவீட்டி வந்தார். இதனால் அவர் 2018-ல் அதிக பேசப்பட்ட பிரபலங்கள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

விஜய் :

விஜயின் நடிப்பில் வெளியான சர்கார் படம் கண்ட சர்ச்சைகள் என்ன என்பது உங்களுக்கே தெரியும். இந்த பிரச்சினைகளாலும் மக்களின் ஆதரவாலும் பல முறை ட்ரெண்டாகி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மகேஷ் பாபு :

மகேஷ் பாபு தான் நடித்து வரும் படத்தை பற்றிய அப்டேட்களை அடிக்கடி வெளியிட்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் லிஸ்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் :

தெலுங்குவில் பிரபல நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் அரவிந்தா சமிதா வீர ராகவா என்ற படத்தை பற்றிய அப்டேட்களை அதிக அளவில் வெளியிட்டு விளம்பரம் செய்து வந்ததால் 4-ம் இடத்தை பிடித்துள்ளார்.

சூர்யா :

கடந்த முறை 2-ம் இடத்தில் இருந்த சூர்யா 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சூர்யா படம் பற்றிய அப்டேட்கள் பெரிய அளவில் வெளியாகததே இதற்கு காரணம். இருப்பினும் NGK பற்றிய சில அப்டேட்கள், கேரள வெள்ளத்திற்கு சூர்யா உதவியது போன்றவை 5-ம் இடத்தை பெற்று கொடுத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.