Top 100 Celebrities

Top 100 Celebrities : இந்தியாவில் கடந்த வருடத்தில் அதிகம் சம்பாதித்த டாப் 100 பிரபலங்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் தமிழ் சினிமாவின் உள்ள பிரபலங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இடம் பெற்றுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் 11-வது இடத்தையும் சூப்பர் ஸ்டார் ஸ்டார் ரஜினிகாந்த் 14-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தளபதி விஜய் 26-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் விக்ரம் 29-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆனால் இந்த லிஸ்டில் அஜித்தின் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய வருத்தம் தான்.

ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் பிரபல பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கை அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018-ம் ஆண்டு வரையிலான லிஸ்ட்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தின் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை என்பதால் தான் அந்த லிஸ்டில் அஜித்தின் பெயரில் இடம்பெறவில்லை என கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.