Best Teaser 2019
2019-ல் மக்களை மிரள வைத்த டாப் 10 டீசர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

1. சைக்கோ :

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் உதயநிதி பார்வையற்றவராக நடித்துள்ளார். இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் டீஸர் பார்ப்பவரை அதிர வைத்துள்ளது. பலருக்கு கொஞ்சம் பயத்தையும் கொடுத்துள்ளது.

YouTube video

2. கைதி :

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. போலீசை காப்பாற்றும் கைதியாக கார்த்தி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

YouTube video

3. பிகில் :

விஜயின் வெறித்தனமான நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த படம் பெண்களின் கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகி இருந்தால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த படத்தின் டீஸர் அதிகமான அளவில் பார்வையாளர்களை பெற்றிருந்தது.

YouTube video

 

4. மாஃபியா :

அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் மூடம் நவீன் இயக்கத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

YouTube video

5. ஆடை :

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் ஆடையே இல்லாமல் ஆபாசம் காட்டாமல் துணிச்சலாக நடித்திருந்த இப்படத்தின் டீசர் படத்தில் அப்படி என்ன தான் சொல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

YouTube video

6. உறியடி 2 :

விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் உறியடி என்பதால் இதன் இரண்டாம் பாகமான உறியடி 2 மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, அதன் காரணமாக இந்த டீசரும் அதிக பேரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

YouTube video

7. தடம் :

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து மாபெரும் வெற்றியை சுவைத்த திரைப்படம் தடம். இப்படத்தின் டீசரும் மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகம் கூட்டி இருந்தது.

YouTube video

8. மிக மிக அவசரம் :

ஒரு பெண் போலீஸ் படும் கஷ்டங்களை அழகாக பேசிய இப்படத்தின் டீசரும் அதிக பேரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

YouTube video

9. வாழ் :

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் அருண் புருசோத்தமன் இயக்கி இருந்த அருவி படமே.

YouTube video

10. 100 :

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவான 100 படத்தின் டீசர் போதை மருந்து, பெண் கடத்தலை பற்றி அழுத்தமாக பேசியது. இந்த படத்தின் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டும் விதத்தில் அமைந்திருந்தது.

YouTube video

குறிப்பு : இந்த டாப் 10 தொகுப்பு பார்வையாளர்களை வைத்து உருவாக்கப்பட்டது இல்ல. ரசிகர்களின் விமர்சனங்கள் மற்றும் படத்தின் கன்டென்ட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.