Top 10 Tamil Movies 2019
2019-ல் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை அள்ளி கொடுத்த டாப் 10 படங்களின் லிஸ்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன, ஆனால் அந்த படங்கள் அனைத்தும் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தருக்கும் லாபத்தை கொடுத்து விடுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் அனைவரின் பதிலாக இருக்கும்.

2019-ல் சில படங்கள் மட்டுமே தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், தியேட்டர் உரிமையாளர் என அனைவர்க்கும் லாபத்தை கொடுத்துள்ளது.

அந்த படங்களின் டாப் 10 லிஸ்ட் இதோ

1. விஸ்வாசம் :

அஜித் நடிப்பில் வெளியான இந்த படம் குறைந்த பட்ஜெட் அதிக வசூல் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபம் கொடுத்து டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.

2. அசுரன் :

வெற்றிமாறன் இயக்க தனுஷின் வெறித்தனமான நடிப்பில் வெளியான இந்த படமும் வசூல் ரீதியாக மிக பெரிய சாதனை படைத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

3. பேட்ட :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் விஸ்வாசத்துடன் மோதியது, ரஜினி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்த இந்த படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

4. பிகில் :

விஜயின் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கால்பந்தை மையமாக கொண்டு வெளியான இப்படம் 2019-ல் அதிக வசூல் செய்த படத்தில் முதலிடம் என்றாலும் படத்தின் பட்ஜெட்டால் லாபம் குறைந்து நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

5. கைதி :

பிகிலுடன் சேர்ந்து தீபாவளிக்கு ரிலீசான இப்படம் லோகேஷ் கனகராஜின் கை வண்ணத்தால் அனைவராலும் ரசிக்கப்பட்டது. வெறும் ரூ 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததால் டாப் 10-ல் லிஸ்டில் 5-ம் இடம் பிடித்துள்ளது.

6. சூப்பர் டீலக்ஸ் :

விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இப்படம் டாப் 10 லிஸ்டில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

7. தடம் :

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் டைட்டிலுக்கு ஏற்றபடியே பாக்ஸ் ஆஃபிஸில் தடம் பதித்து ஏழாம் இடம் பிடித்துள்ளது.

8. தில்லுக்கு துட்டு 2 :

சந்தானத்தின் காமெடி கலந்த நடிப்பில் வெளியான இப்படம் வசூலில் கலக்கு கலக்கு என கலக்கி டாப் 10 லிஸ்டில் 8-ம் இடம் பிடித்துள்ளது.

9. நம்ம வீட்டு பிள்ளை :

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்ப படமாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மக்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. இதனால் டாப் 10 லிஸ்டில் 9-ம் இடத்தை பிடித்துள்ளது.

10. காப்பான் :

சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் வசூலுக்கு பங்கம் இல்லை. இப்படம் டாப் 10 லிஸ்டில் 10 இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.