Top 10 Movies of Suriya in IMDB

சூர்யாவின் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து ஐஎம்டிபி தளத்தில் வெளியிட்டு உள்ள தகவல்களை பார்க்கலாம்.

Top 10 Movies of Suriya in IMDB : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதுவரை இவரது நடிப்பில் வெளியான படங்களை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் ஐஎம்டிபி தளத்தில் வெளியாகி உள்ளன. அந்த லிஸ்ட் இதோ உங்களுக்காக

  1. வாரணம் ஆயிரம்
  2. நந்தா
  3. 24
  4. கஜினி
  5. காக்க காக்க
  6. அயன்
  7. மௌனம் பேசியதே
  8. சிங்கம்
  9. தானா சேர்ந்த கூட்டம்
  10. பிதாமகன்

இந்த பத்து படங்களில் உங்களின் ஃபேவரைட் படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டுகளில் ஷேர் செய்யுங்கள்.