Top 10 Movies in OTT 2020

இந்த வருடத்தில் OTT-ல் மாஸ் காட்டிய 3 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Top 10 Movies in OTT 2020 : தமிழ் சினிமாவில் உருவாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம்.

ஆனால் இந்த வருடம் கொரானா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பெரிய படங்கள் கூட OTT வழியாக வெளியாகி உள்ளது.

இந்த வகையில் 2020-ல் OTT வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மூன்று தமிழ் திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

அதாவது சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் 8வது இடம் கிடைத்துள்ளது.

ஜோதிகாவின் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்திற்கு பத்தாம் இடம் கிடைத்துள்ளது.

முதல் 10 இடங்களில் மற்ற 7 இடங்களை பிறமொழி படங்களே பிடித்துள்ளன. சுஷாந்த் சிங் இறுதியாக நடித்த தில் பாச்சாரே என்ற திரைப்படம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.