
2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நடிகைகள் யார் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் லிஸ்டில் திரிஷா, நயன்தாரா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் என எண்ணற்ற நடிகைகள் இருந்து வருகின்றனர்.

முன்பெல்லாம் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் போய்விடும் என்ற நிலைமை மாறி தற்போது திருமணத்திற்கு பின்னரும் நடிகைகள் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர்.
அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் நடிகைகள் யார் யார் என்பது குறித்த வெளியாகி உள்ளது. இதில் சமந்தா, நயன்தாரா உட்பட பலரை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

இதோ அந்த டாப் 10 லிஸ்ட்
1. காஜல் அகர்வால்
2. சமந்தா
3. ராஷ்மிகா மந்தனா
4. தமன்னா
5. நயன்தாரா
6. அனுஷ்கா
7. பூஜா ஹேக்டே
8. கீர்த்தி சுரேஷ்
9. சாய் பல்லவி
10. ரகுல் ப்ரீத் சிங்