Tomorrow Tasmac Holiday | Tamil Nadu | Chennai | Election results 2019 | Election results | Tasmac Holiday | Latest News |

Tomorrow Tasmac Holiday :

சேலம் : வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து வித மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இந்நிலையில் இதை தொடர்ந்து, நாளை (23-05-19) வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது.

சிம்புவை தொடர்ந்து நாளை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் சிவகார்த்திகேயன் – விஷியம் என்ன தெரியுமா?

இதனையடுத்து, சேலம் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையரின் உத்தரவுப்படி, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் 23ம் தேதி மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.

எனவே, நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3ஏ மற்றும் எப்எல்3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் மூட வேண்டும்.

எந்த பகுதியிலும் மது விற்பனை செய்ய கூடாது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.