Tomato Chutney
Tomato Chutney

Tomato Chutney :

தக்காளி சட்டினி :

இன்றைய காலத்தில் தினமும் ஒரே மாதிரியான உணவு பழக்கத்தை குழந்தைகள் விரும்புவது இல்லை. அது போல் இணை உணவும் வேறு வேறு வகைகளை தினமும் யோசித்து செய்ய வேண்டி இருக்கின்றது.

அதில் காலை சட்னி சேவதற்குதான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. அதனை தடுக்க இதோ ருசியான தக்காளி சட்னி.
தேவையான பொருட்கள் :

தக்காளி – 3
எண்ணெய் – தேவைக்கு
வெங்காயம் – 1
பச்சை மிகாய் – 2
பூண்டு – 3 பல்லு
தேங்காய் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு

செய்முறை :

தக்காளியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து பின் அதை தோலுரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு பின் அதனுடன் பச்சை மிளகாய், வேக வைத்த தக்காளி மற்றும் உப்பு, தேங்காய் துருவல் கொஞ்சம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் விடாமல், நன்றாக வதக்கி பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து தாளித்து இறக்கினால் சுவையான தக்காளி சட்னி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here