Today Match : Cricket World Cup | Bangladesh vs Sri Lanka | Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match

Today Match : 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

வங்காளதேச அணியின் பேட்டிங்கில் ஷகிப் அல்-ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை.

சிக்ஸ் பேக் வைத்தது இல்லாமல் ஊருக்கே போட்டோ போட்டும் அஜித் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்!

அந்த அணியின் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு இருக்கிறது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இலங்கை அணியினர் ஒருங்கிணைந்த ஆட்டத்தை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிஸ்டலில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.