Today IPL Match :
Today IPL Match :

Today IPL Match : இந்தியாவின் 12வது பிரிமியர் தொடர் நடக்கிறது. இதில் இன்று நடக்கும் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு, தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.

இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத கோஹ்லி அணி, இதுவரை பங்கேற்ற நான்கு போட்டியிலும் தோற்றுள்ளது.

பேட்டிங், பவுலிங் என எதுவும் சரியாக அமையவில்லை. சென்னையிடம் 70 ரன்னுக்கு சுருண்ட இந்த அணி, ஐதராபாத்திடம் 35 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை பறி கொடுத்தது.

நான்கு போட்டியில் களமிறங்கிய போதும் இன்னும் சரியான வீரர்களை கண்டறிய முடியாமல் கேப்டன் கோஹ்லி தவிக்கிறார்.

பேட்டிங்கில் கோஹ்லி (6, 46, 3, 23) சொதப்புகிறார். இவரது சராசரி 20 ரன்னுக்கும் கீழாக உள்ளது.

பார்த்திவ் படேல் (29, 31, 11, 67), டிவிலியர்ஸ் (9, 70, 1, 13) தவிர, ஹெட்மயர் (0, 5, 9, 1), மொயீன் அலி (9, 13, 2, 18) என பேட்டிங் சராசரி 20 ரன்னுக்கும் குறைவாக உள்ளது.

பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர் சகால் மட்டும் ஆறுதல் தருகிறார். 4 போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மற்றபடி உமேஷ் யாதவ், முகமது சிராஜ், கிராண்ட்ஹோம் உள்ளிட்டோர் விக்கெட் வேட்டை நடத்துவதற்குப் பதில் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

முதல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ள கோஹ்லிக்கு சொந்தமண் சுகம் தருமா என இன்று தான் தெரியும்.

கோல்கட்டா அணி மூன்று போட்டியில் இரண்டில் வென்றது. நிதிஷ் ராணா, உத்தப்பா, பின் வரிசையில் சிக்சர் மழை பொழியும் ஆன்ட்ரி ரசல் என பேட்டிங்கில் பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.

தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு கலக்குகிறார். பந்துவீச்சில் குல்தீப், பியுஸ் சாவ்லா கூட்டணியுடன் வேகத்தில் கைகொடுக்க பிரசித் கிருஷ்ணா, கிறிஸ் லின் மற்றும் பெர்குசன் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.