நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஆன புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது.

தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் அதேபோல் தற்போது எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து அதில் இன்று நான் ஒரு தங்க பெண் என்று அப்புகைப்படத்தின் கீழ் பதிவிட்டு பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.