
மாமியாரை எதிர்த்து பேசுகிறார் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு வந்திருக்க அப்போது பார்வதி என்கிட்டயே உண்மைய மறைக்கிற பாத்தியா என மீனா தனக்கு போன் செய்த விஷயத்தை சொல்ல விஜயா இனியும் மறைக்க முடியாது என மனோஜை பார்த்து வந்த விஷயத்தை கூறுகிறார்.

மேலும் மனோஜ் ஒரு வேலைக்கு போனதும் அவனை வீட்டுக்கு அழைத்து வருவேன் என சொல்ல பார்வதி எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல பொண்ணு இருக்கு அதை பேசலாம் என சொல்கிறார். மறுபக்கம் மீனா கடைக்கு சென்று இருந்தபோது அங்கே அவரது அம்மாவின் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் பார்த்து ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்ய சொன்ன விஷயத்தை சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு நேராக ஹவுஸ் ஓனரிடம் சென்று பேச அவர்கள் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது. 15 நாள் தான் டைம் என சொல்ல மீனா தன்னுடைய அம்மாவிடம் சென்று என்ன செய்யப் போறீங்க அவரால உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை என வருத்தப்பட்டு பேச அவர்கள் பக்கத்து தெருவுல ஒரு வீடு இருக்கு அதை பார்த்துக்கலாம் நீ ஒன்னும் கவலைப்படாத என சொல்லி சமாதானம் செய்கின்றனர்.

பிறகு மீனா வீட்டுக்கு வர அவளை தடுத்து நிறுத்தும் விஜயா எங்க போயிட்டு ஊர் சுத்திட்டு வர என்று கேட்க கடைக்கு போயிட்டு வரேன் அத்தை என மீனா பதில் கூறுகிறார். கிச்சன்ல எந்த வேலையும் நடக்காம அப்படியே இருக்கு என சொல்ல நீங்க தானே உங்ககிட்ட கேட்காம எதையும் சமைக்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க என பதில் சொல்ல எல்லாமே என்கிட்ட கேட்டு தான் செய்றியா? என்கிட்ட கேட்டு தான் நீ பார்வதிக்கு போன் போன் பண்ணியா என கேட்டு மீனாவை திட்டுகிறார்.
நான் என்ன பண்றேன் ஏது பண்ணுகிறேன் என்று தெரிந்து கொண்டு அதை உன் மாமனார் கிட்ட போட்டு கொடுக்கணும் இந்த வேலையைத்தான் உங்க அம்மா சொல்லிக் கொடுத்து இருக்காங்களா என திட்ட மீனா எங்க அம்மாவ பத்தி எதுக்கு பேசுறீங்க என கோபப்படுகிறார்.

நீ யாரு என்னன்னு எனக்கு நல்லா தெரியும் உன் வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத என விஜயா மீனாவை எச்சரிக்க என்ன பண்ணுவீங்க அத்தை? என்ன வாழ விடாமல் பண்ணிடுவீங்களா என கேட்க நான் எதுக்கு அதெல்லாம் பண்ணனும்? நீ ஆத்தை கடக்க மண்குதிரை மேல ஏறி இருக்க, முத்துவை கட்டிக்கிட்டியே.. நீ எப்படி வாழறதுன்னு நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார்.
பிறகு வீட்டுக்கு வரும் முத்து சரக்கு அடிக்க கிளாஸ், ஸ்நாக்ஸ் தேட மீனா உங்களால எவ்வளவு பிரச்சனை என முத்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் சரக்கு டம்ளரை தள்ளிவிட கோபப்படும் முத்து மீனாவை பிடித்து கட்டிலில் தள்ளி விடுகிறார். இந்த நேரத்தில் மீனாவின் அம்மா போன் செய்து நீ ரொம்ப கொடுத்து வச்சவ, மாப்பிள ரொம்ப நல்லவர் நீ வேற ஏம்மா இந்த நேரத்துல என கோபப்படுகிறார்.

பிறகு மீனாவின் அம்மா சந்திரா மதியம் மாப்பிள்ளை இங்க வந்திருந்தார் என சொல்ல மீனா அந்த விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் வருகிறது.