Watch Full VIdeo : திமுகவை பின்னுக்கு தள்ளி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அதிமுக – வெளியான கருத்துக் கணிப்பு

TNElection People Opinion Result : தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூடமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன்.

ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் அமைப்பு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

சர்வே முடிவுகள் மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது”

அ.தி.மு.க கூட்டணி:
கொங்கு மண்டலம் – 40
தொண்டை மண்டலம் – 34 + 8
சோழ மண்டலம் – 20
பாண்டிய மண்டலம் – 20

தி.மு.க கூட்டணி:
கொங்கு மண்டலம் – 28
தொண்டை மண்டலம் – 24 +12
சோழ மண்டலம் – 21
பாண்டிய மண்டலம் – 26

அ.ம.மு.க கூட்டணி:
பாண்டிய மண்டலம் – 1

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாக பார்ப்பதும் அ.தி.மு.க கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதாக அமைந்துள்ளது.

அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு மற்றும் தேவேந்திரகுலவேளார் என்ற பெயர் மாற்றம் ஆகியவை அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.

ஆளும் கூட்டணிக்கு கொங்கு மண்டலத்தில் நடைபெற்றுள்ள திட்டங்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதும் அதே சமயம் தொண்டை மண்டலத்தில் கூட்டணி கட்சிகளின் பலமும் அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

மக்கள் நீதி மய்யம், தி.மு.க கூட்டணி வாக்குகளை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை தி.மு.கவிற்கு செல்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்கிறது. இது தவிர தி.மு.கவின் நிரந்த வாக்கு வங்கியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறித்துள்ளதை சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அ.தி.மு.க கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் முன்னிலையில் உள்ளதை சர்வே முடிவுகள் சுட்டிக் காட்டுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.