TN Minister Wishes to Master Team

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மாஸ்டர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

TN Minister Wishes to Master Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் இப்படம் இந்த வருட ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரானா தொற்று காரணமாக தள்ளி போனது.

மாஸ்டர் படக்குழுவினரை பாராட்டிய தமிழக அமைச்சர் - காரணம் என்ன தெரியுமா??

இதனையடுத்து இப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படம் திரையரங்குகளில் வெளியாகாது என தகவல் பரவியது.

ஆனால் படக்குழு படம் நிச்சயம் திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என அறிவித்து இருப்பதை வரவேற்பதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தால் தான் திரையரங்குகளில் மீண்டும் பழையபடி கூட்டம் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.