vijay2
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக உயர்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

TN Govt notice to sairam college against bigil function – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் இசை வெளியிட்டு விழா சென்னைக்கு அருகேயுள்ள தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் ‘சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீது, பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என அதிமுக அரசை மறைமுகமாக சாடினார். அதை விட ஒரு படி மேலே போய் ‘யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் சரியாக இருக்கும்’ எனப் பேசி அதிர வைத்தார். அவரின் அந்த பேச்சுக்கு அதிமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்கார் படமே வெளியே வந்திருக்காது – விஜயை மிரட்டும் அதிமுக அமைச்சர்

இந்நிலையில், பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என விளக்கம் கேட்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் இறைச்சி வியாபாரிகள் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசை விமர்சித்ததாலேயே இப்படி நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.