மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கிடையாது என வெளியான செய்தி குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

TN Govt clarify on cancel of quarterly leave – தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் முடிந்த பின்னர் அக்டோபர் 2ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை துவங்கவுள்ளது. ஆனால், காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், அந்த விடுமுறை நாட்களில் அதாவது காந்தியின் சிந்தனை குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

NGK-வை பின்னுக்கு தள்ளிய கோமாளி – அதிர வைக்கும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.!

இந்நிலையில், இந்த செய்தியை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது. இப்படி வெளியான செய்தி முற்றிலும் வதந்தி ஆகும். மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காந்திய சிந்தனை சார்பாக சிறப்பு வகுப்புகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம். அதில், விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.