தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய புதிய மசோதா அமைச்சரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

TN Government Move on Medical Seats : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை நன்கு அறிந்து செயல்பட்டு வருகிறது.

அதேசமயம் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என அம்மா எப்படி மத்திய அரசை எதிர்த்து போராடி வந்தாரோ அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் மருத்துவக் கல்வி பயில தமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் கூறி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார்‌.

இந்த மசோதாவிற்கு அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தால் அது நிச்சயம் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான ஒன்றாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.