TN Election Dates 2019
TN Election Dates 2019

TN Election Dates 2019 – “தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது” .

தேர்தல் நடைபெறும் நாட்கள் நெருங்கி வரும் இவ்வேளையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் தேதிகள் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ‘தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அதை தொடர்ந்து மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26 தேதி என அறிவித்துள்ளது.

மேலும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதி ஆகும். மேலும் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 23- ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் புதுச்சேரியை பொருத்த வரையில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி, முதற்கட்டதிலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.