TN CM Launches Smart Bike Service in Marina

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் பைக், அடுத்த தலைமுறை பைக் சேவையை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி

TN CM Launches Smart Bike Service in Marina : கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் முயற்சியின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வியாழக்கிழமை அன்று மொத்தம் 1,000 ஸ்மார்ட் பைக்குகள் மற்றும் அடுத்த தலைமுறை பைக்குகளை அறிமுகப்படுத்தினார்.

ஸ்மார்ட் பைக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் தர்மின் டோண்டம்செட்டி, கோவிட் -19 லாக் டவுனுக்கு முன்பு பைக்குகள் தயாராக இருந்தன, ஆனால் lock down கட்டுப்பாடுகள் காரணமாக அதை தொடங்க முடியவில்லை.

“நாங்கள் முதலில் அவற்றை இங்கே தொடங்க காத்திருந்தோம், ஆனால் கடந்த டிசம்பரில் சண்டிகரில் அவற்றைத் தொடங்கினோம்,” என்று அவர் கூறினார். பேட்டரி மூலம் இயங்கும் பைக்குகள், பெடல் செய்யக் கூடியவை, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டவுடன் 45 கி.மீ பயணம் செய்யலாம்.

“அமெரிக்கா போன்ற நாடுகளில் எங்களது ஆய்வுகள், போக்குவரத்து நேரத்தின் போது இரு சக்கர வாகனம் அல்லது காரை விட ஒரு பயணி இந்த பைக்குகளில் வேகமாக ஒரு இலக்கை அடைய முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் இதில், டயர்கள் பஞ்சர் ஆகாது, சங்கிலி உடையாது, ”என்று அவர் கூறினார்.

மொபைல் ஆஃப்பை பயன்படுத்தி மக்கள் இந்த பைக்கை பயன்படுத்தி கொள்ள முடியும். QR குறியீட்டை பயன்படுத்தி இந்த பைக்கை ஓபன் செய்ய முடியும்.

இந்த பைக்கை பயன்படுத்த ஒரு நிமிடத்திற்கு ரூ .1 க்கு வாடகையாக வசூலிக்கப்படுகிறது, அடுத்த தலைமுறை பைக் அரை மணி நேரத்திற்கு ரூ 5.50 ஆகவும், ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் ரூ 9.90 வசூலிக்கப்படும்.

இந்த பைக் மூலம் மக்கள் போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். பெட்ரோல் மீதான தேவையற்ற செலவுகள் ஆகியவற்றிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்,” என்று ரஞ்சித் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.